கராத்தே போட்டியில் கிளிநொச்சி மாணவி தங்கம் வென்று சாதனை

50
0
Spread the love

வட மாகாண மட்டத்தில் நடைபெற்ற கராத்தேப் போட்டியின் 20 வயதிற்குட்பட்ட மகளிர் பிரிவில் (Under-20 Girls), கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் மாணவி K. ஷாலினி சிறப்பான திறமையை வெளிப்படுத்தி Kumite (+50 கிலோகிராம்) பிரிவில் சாம்பியன் பட்டத்தையும் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் தனது பாடசாலைக்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள அவருக்கு கல்விச் சமூகத்தினரும் விளையாட்டு ஆர்வலர்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருவதோடு அவரைச் சிறப்பாகப் பயிற்றுவித்து வழிநடத்திய பயிற்றுவிப்பாளர் தர்ஷனுக்கும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here