கெஹெலியவின் உறவினருக்கு விளக்கமறியல்

167
0
Spread the love

கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நெருங்கிய உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (03.02) கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அவரது இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையின் போது நிதி மோசடி குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here