தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நேற்று திடீரென இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
அவரது இந்த வருகை இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்கான உண்மையான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கருப்பு திரைப்படத்தின் முக்கிய காட்சிகள், நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் படமாக்கப்பட்டன.
இதற்காக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் நாடாளுமன்ற கட்டடத்தொகுதி போன்று பயன்படுத்தப்பட்டதாகவும் நடிகர் சூர்யா கலந்துகொண்ட காட்சிகள் விறுவிறுப்பாகப் படமாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திரைப்படம் எதிர்வரும் 14 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் சில முக்கிய காட்சிகளுக்காகப் படக்குழு இலங்கையைத் தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






