105 இலட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு

201
0
Spread the love
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பளை பகுதியில் 30 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (12.01) பளை பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது, இந்த கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.

14 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்ட கேரள கஞ்ஞாவின் பெறுமதி 105 இலட்சம் ரூபாவாகும்.

எனினும் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை.

இது தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here