நாளை கொழும்பில் GMOA கண்டனப் போராட்டம்; மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாது

29
0
Spread the love

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நாளை (10) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் கண்டனப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையின்போது வைத்தியசாலைகளில் எந்தவிதப் பணிப்புறக்கணிப்பும் இடம்பெறாது எனவும், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நோயாளர் பராமரிப்புச் சேவைகள் வழமை போல் தொடரும் எனவும் அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமை, உத்தியோகபூர்வ இல்லப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாமை போன்ற பல்வேறு சிக்கல்களை முன்வைத்து நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் இந்த அமைதிப் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் கிடைக்கும் என நம்புவதாகவும், அரசாங்கம் கோரிக்கைகளைப் புறக்கணித்தால் எதிர்காலத்தில் கடுமையான தொடர் நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here