கரையோர ரயில் மார்க்க விபத்து – இளைஞர்கள் இருவர் பலி

221
0
Spread the love

கரையோர ரயில் மார்க்கத்தில் கெப் ரக வாகனமொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில்
காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

பயாகல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையொன்றிலேயே இன்று (22.02) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காலியில் இருந்து மருதானை நோக்கிச் செல்லும் காலி குமாரி விரைவு ரயிலிலேயெ கெப் வண்டி மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது சாரதி உட்பட பகாயமடைந்த மூவரும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரயிலில் மோதியதையடுத்து, குறித்த கெப் வண்டி சுமார் 50 மீற்றர் தூரம் வரை ரயிலால் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ரயில் கடவையில் சமிக்ஞை அமைப்பு சரியாக இயங்கவில்லை என்றும், ரயில் கடவையில் சரியான பாதுகாப்பு வாயில் நிறுவப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த விபத்து காரணமாக, கரையோர ரயில் மார்க்கத்தின் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here