கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட 2ம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்கிறது என தேசியகட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.







