நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

17
0
Spread the love

டி20 உலகக் கிண்ணத் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றின் 52ஆவது லீக் ஆட்டத்தில் இன்று (01.03) இரவு இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதவுள்ளன.

அதன்படி, இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளதுடன், மேற்கிந்தியத் தீவுகள் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்துள்ளது.

இந்தப் போட்டி இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கும் இது ஒரு ‘வாழ்வா சாவா’ போட்டியாகும். இந்த வெற்றி அரையிறுதிக்கு முன்னேறும் அணியைத் தீர்மானிக்கும் என்பதால் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய நேரப்படி இன்று இரவு 7:00 மணிக்கு இந்த ஆட்டம் ஆரம்பமாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here