இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் பொது அவசரகால நிலைமையைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை
வர்த்தமானி ஊடாக வலியுறுத்தப்பட்டள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியைப் பேணுவதற்கும், அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான வழங்கல்கள்
மற்றும் சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.







