தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளார்
இந்த சம்பவம் இன்று (18.07) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்களில் வருகைத்தந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
45 வயதான நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.







