மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

104
0
Spread the love

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று (03) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி முதலாவது விமானம் புறப்பட்டுச் சென்றது.

ஃபிட்ஸ் எயார் (Fits Air) விமான சேவைக்குச் சொந்தமான 8D 821 என்ற விமானம் இன்று பிற்பகல் 01.20 மணியளவில் கட்டுநாயக்கவிலிருந்து துபாய் நோக்கிப் புறப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்த விமானத்தில் 47 பயணிகளும் 10 விமானப் பணியாளர்களும் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு வான்பரப்பு குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்கு மாத்திரம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடைப்பட்ட நேரத்தில் விமானங்கள் இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பறக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here