குருநகர் படகு விபத்து – காணாமல் போனோரை தேடும் பணி தொடர்கிறது

96
0
Spread the love

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் இன்று (06.03) படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காணாமல் போன இருவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விபத்துக்குள்ளான குறித்த படகில் பயணித்த நிலையில் மீட்கப்பட்டிருந்தவர்களில் இருவர் உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இதனை    உறுதிப்படுத்தினார்.

நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானவர்களில் 13 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர், மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் (2 பெண்கள் ஒரு ஆண்).

மேலும் 8 பேர் சாதாரண நோயாளர் சிகிச்சை அறையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பாலைத்தீவு திருவிழாவுக்கு யாத்திரிகர்கள் சென்ற படகு ஒன்றே இன்று காலை 6 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளானது.

குறித்தப் படகில் 25 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 23 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காணாமல் போன இருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here