பரிகார பூஜை என்ற பெயரில் மாணவிக்கு பாலியல் தொல்லை -பிரதேச சபை உறுப்பினர் கைது

30
0
Spread the love

கிரக தோஷம் மற்றும் தீய சக்திகளை நீக்குவதாகக் கூறி 19 வயது மாணவியொருவருக்கு பாலியல் தொல்லை வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரணாயக்க தொகுதி அமைப்பாளரும் முன்னாள் அரணாயக்க பிரதேச சபை உறுப்பினருமான ஒருவர் மாவனல்லை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த (07.06) மாலை இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவனல்லை, கணேதென்ன, ஹிங்குல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவி ஒருவர் மாவனல்லை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சந்தேகநபர் ஹெம்மாத்தகம –மாவனல்லை வீதியின் தேவனகல பகுதியில் உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவ மையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

மாணவியின் கிரக தோஷம் மற்றும் தீய சக்திகளை நீக்குவதற்காக பரிகார பூஜை நடத்துவதாகக் கூறி, அவருக்கு பாலியல் தொல்லை வழங்கப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி மாவனல்லை பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here