மின்சார சபை ஊழியர் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு

55
0
Spread the love

மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று (11.03) கைவிடப்பட்டுள்ளது.

மின்சார சபை கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட புதிய நிறுவனங்களின் நிர்வாகத்திற்கும், ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திடுவது உள்ளிட்ட 8 பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே கடந்த 9 ஆம் திகதி முதல் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொழில் ஆணையாளர் மற்றும் புதிய நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு நாளைய தினம் ஜனாதிபதியை சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

நாளைய பேச்சுவார்த்தையின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் எனத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here