பயணிகளுக்குப் பயணச் சீட்டு வழங்கத் தவறிய 132 பஸ் நடத்துநர்கள் மீது சட்ட நடவடிக்கை

172
0
Spread the love

பயணிகளுக்குப் பயணச் சீட்டு வழங்கத் தவறிய குற்றச்சாட்டில் 132 தனியார் பஸ் நடத்துநர்கள் மீது மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், செல்லுபடியாகும் பயணச் சீட்டுகள் இன்றிப் பயணம் செய்த 09 பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகனத்தைச் செலுத்தும் போது தொலைபேசியை பயன்படுத்துதல், உரிமம் இல்லாமல் பஸ்ஸை இயக்குதல், மற்றும் போலி ஆவணங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 228 சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், கட்டாய மறுபயிற்சி மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பயணச் சீட்டு வழங்கும் முறை இந்த மாதத்தின் முதாலம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, விதிமுறைகளை அமுல்படுத்தத் தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here