மழையால் போட்டி இரத்தானால் யாருக்கு கிண்ணம்?

49
0
Spread the love

இந்தாண்டு ஐபிஎல் சீசன் எதிர்வரும் 28 முதல் மே 31 வரை நடைபெற உள்ளது. முதல் போட்டியில் பெங்களூரு – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இதற்கிடையில், வட இந்தியாவில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் பல போட்டிகள் மழையால் பாதிக்கப்படக்கூடும் என கூறப்படுகிறது.

மழை காரணமாக போட்டி தடைப்பட்டால், கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்படும். அந்த நேரத்திற்குள் முழு போட்டி நடத்த முடியாவிட்டால், குறைந்தது 5 ஓவர் போட்டி நடத்தி முடிவை தீர்மானிக்க முயற்சி செய்யப்படும்.

அதுவும் சாத்தியமில்லையெனில், சூப்பர் ஓவர் மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்படலாம்.

ஆனால், 5 ஓவர்களுக்குக் கூட போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், அந்த ஆட்டம் ரத்து செய்யப்படும். அப்போது இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்.

இறுதிப்போட்டிக்கு மட்டும் ‘ரிசர்வ் டே’ ஒதுக்கப்பட்டுள்ளது. மழையால் போட்டி நடத்த முடியாவிட்டால், அடுத்த நாள் நடைபெறும்.

அதிலும் போட்டி முழுவதும் ரத்து செய்யப்பட்டால், புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அணி செம்பியனாக அறிவிக்கப்படும்.

எவ்வாறாயினும் ஐ.பி.எல் வரலாற்றில் இவ்வாறான சந்தர்ப்பம் இடம்பெற்றதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here