ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் சிக்கி வெடித்த இரு எண்ணெய்க் கப்பல்கள்

15
0
Spread the love

ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணித்த இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் கடலில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளில் சிக்கி வெடித்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கடற்படை தெரிவித்துள்ளது.

ஈரான் அனுமதிக்காத கடற்பாதையில் குறித்த கப்பல்கள் பயணித்ததன் காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஈரானியத் தரப்பு கூறியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அவற்றை மீறுவதாகக் கருதப்படும் கப்பல்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கப்பல்கள் மீது தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையின் ஊடான கடற்போக்குவரத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஈரான் முயற்சித்து வருகின்றது.

இந்த முக்கியமான கடல்வழிப் பாதையில் பயணிக்கும் கப்பல்கள் ஈரானின் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைப் பயன்படுத்த வேண்டும் என அந்நாடு வலியுறுத்தி வருகின்றது.

இதற்கிடையில், அனுமதியற்ற பாதைகளில் பயணிக்கும் கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஈரானியக் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் மூலம் ஹோர்முஸ் நீரிணையின் மீதான தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதுடன், அமெரிக்கா மீது அழுத்தத்தை ஏற்படுத்தவும் ஈரான் முயற்சிப்பதாக சர்வதேச ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

எனினும், தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களின் பெயர்கள், அவற்றில் இருந்த பணியாளர்களின் நிலை மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here