பதுக்கி வைக்கப்பட்டிருந்த 720 லீற்றர் டீசலுடன் இருவர் கைது

78
0
Spread the love

ஹங்வெல்ல, எம்புல்கம சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 720 லீற்றர் டீசலுடன் இரு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த டீசல் கையிருப்பு விற்பனை செய்யும் நோக்கில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையத்திற்குள் கேன்கள் மற்றும் சுமார் 40 பீப்பாய்களில் இந்த டீசல் கையிருப்பு சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் நாளை (21) ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here