எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு: இன்று நள்ளிரவு முதல் புதிய நடைமுறை அமுல்

99
0
Spread the love

QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை (Quota) இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, வாகனங்களுக்கான புதிய எரிபொருள் ஒதுக்கீட்டு விபரங்கள் பின்வருமாறு:

மோட்டார் வாகனங்கள்: 15 லீற்றரிலிருந்து 25 லீற்றர் வரை அதிகரிப்பு. 

முச்சக்கரவண்டிகள்: எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றர் வரை அதிகரிப்பு. 

வேன்கள்: 50 லீற்றர் வரை அதிகரிப்பு. 

மோட்டார் சைக்கிள்கள்: 8 லீற்றர் வரை அதிகரிப்பு. 

பேருந்துகள் : 100 லீற்றர் வரை அதிகரிப்பு. 

 

நில வாகனங்கள் :  25 லீற்றரிலிருந்து 40 லீற்றர் வரை அதிகரிப்பு.

 

குவாட்ரி சைக்கிள்கள் : 5  லீற்றரிலிருந்து 8 லீற்றர் வரை அதிகரிப்பு.

 

எவ்வாறாயினும், லொறிகளுக்கான 200 லீற்றர் ஒதுக்கீடு மற்றும் விசேட தேவைக்கான வாகனங்களுக்கு வழங்கப்படும் 40 லீற்றர் ஒதுக்கீடு ஆகியவற்றில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தை சீர்செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here