வாகன மோசடியில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது

87
0
Spread the love

பதிவு உரிமம் இன்றி வாகனங்களை வைத்திருந்த மூன்று நபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி ஆவணங்களைத் தயாரித்து வாகன மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் குறித்து அப்பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மீகஹவத்த மற்றும் கந்தானை பொலிஸ் பிரிவுகளில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 3 கார்கள், 2 ஜீப் ரக வாகனங்கள், ஒரு லொறி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் 21, 39 மற்றும் 44 வயதுடைய கந்தானை மற்றும் மீகஹவத்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச்சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here