ஹொரணையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

69
0
Spread the love

 

ஹொரணையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹொரணை வைத்தியசாலைக்கு அருகில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த பெண் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெல்லப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

வேன் சாரதி அதிவேகமாக வாகனத்தை செலுத்தியமே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here