சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்ற நுவான்

75
0
Spread the love

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடர் உள்ளிட்ட சர்வதேச பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்கு வசதியாக, தமக்கு “தடை இல்லா சான்றிதழ்” கடிதத்தை வழங்குமாறு சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு கட்டளை பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிரேஸ்ட சட்டத்தரணி ஜி.ஜி. அருள்பிரகாசம் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த முறைப்பாடு இன்று (02) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்படி, குறித்த முறைப்பாட்டை பரிசீலனை செய்வதற்காக ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புமாறும் கட்டளையிட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, செயலாளர் பந்துல திஸாநாயக்க, பொருளாளர் சுஜீவ கொடலியத்த மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here