லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

83
0
Spread the love

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அதன் புதிய 4,765 ரூபாவாகும் .

5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 308 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய 1,910 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 140 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அதன் புதிய விலை 890 ரூபாவாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here