நண்பர்களுடன் கடலில் நீராட சென்ற மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு, வெல்லவீதியைச் சேர்ந்த வர்ணகுலசூரிய ஷெஹான் துஷ்மன் பீரிஸ் என்ற 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
குறித்த நபர் கடந்த ஆறு மாதங்களாக தலைமன்னார் டேபிள் கவுஸ் பகுதியில் தங்கி இருந்து மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது .
இந்நிலையில் குறித்த நபர் இன்றைய தினம் (06.04) திங்கட்கிழமை நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு கடலில் நீராட சென்ற நிலையில் சுமார் 1:30 மணியளவில் காணாமல் போய் உள்ளார்
பின்னர் கிராம மக்கள் மற்றும் மீனவர்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், அவர் நீராடிய இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் அவரது உடல் கரைக்கு அடித்துக் கொண்டு வந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல், தலைமன்னார் பொலிஸாரால் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன







