ஈரான் மீதான குண்டுவீச்சை இடைநிறுத்த இஸ்ரேல் இணக்கம்

66
0
Spread the love

டொனால்ட் ட்ரம்ப் தற்காலிக போர்நிறுத்தம் ஒன்றை அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது குண்டுவீச்சுத் தாக்குதல்களை இரண்டு வார காலத்திற்கு இடைநிறுத்த இஸ்ரேல் சம்மதித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறக்க வேண்டும் என்பதற்காக, பிரித்தானிய நேரப்படி இன்று (08) அதிகாலை 1 மணி வரை ட்ரம்ப் வழங்கியிருந்த கால அவகாசம் முடிவடைய 90 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

இதனைத் தொடர்ந்து, போர்நிறுத்தக் காலப்பகுதியில் நீரிணை வழியாக “பாதுகாப்பான பயணத்தை” அனுமதிப்பதற்கு ஈரான் உடன்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்திருந்ததுடன், இஸ்ரேலில் எச்சரிக்கை சைரன் ஒலிகளும் இடைமறிப்புத் தாக்குதல்களும் கேட்டதாக ஸ்கை நியூஸ் செய்தியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here