யாரும் பார்த்திராத தாக்குதலை நடத்துவோம் – ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை

63
0
Spread the love

ஈரானுடன் “உண்மையான உடன்படிக்கை” ஒன்று ஏற்பட்டு, அது முழுமையாகச் செயல்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது ‘Truth Social’ சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“ஏற்கனவே கணிசமான அளவில் பலவீனப்படுத்தப்பட்டுள்ள எதிரியை அழிப்பதற்குத் தேவையான அமெரிக்கக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் இராணுவ வீரர்கள் மட்டுமன்றி, மேலதிக வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் ஏனைய அனைத்து அபாயகரமான தளபாடங்களும் தயார் நிலையில் வைக்கப்படும்.”

இந்த உடன்படிக்கைகள் மீறப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என ட்ரம்ப் கூறினாலும், ஒருவேளை அவ்வாறு மீறப்படுமானால், “யாரும் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய மற்றும் வலிமையான முறையில் மீண்டும் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படும்” என அவர் எச்சரித்துள்ளார்.

ஈரான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதிலும், ஹோமுஸ் நீரிணை திறந்த நிலையிலும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதிலும் நீண்ட காலத்திற்கு முன்பே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here