அவசரகால நிலையை நீடிக்கும் பிரேரணை நிறைவேற்றம்

49
0
Spread the love

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை, 110 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் இன்று (09) நிறைவேற்றப்பட்டது.

இப்பிரேரணைக்கு ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி, புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும், சுயேச்சை உறுப்பினர் அர்ஜுனா ராமநாதனும் இப்பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், இப்பிரேரணை தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட
வேண்டும் எனக் கோரியதையடுத்து இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here