உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான சதி மற்றும் அதற்கு உதவியளித்தமை தொடர்பான சந்தேகத்தின் பேரில், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக இவர் இந்த வழக்கின் முதலாவது சாட்சியாகப் பெயரிடப்பட்டிருந்தார். 2024.10.11 அன்று அளிக்கப்பட்ட முறைப்பாட்டின்
அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவரைக் கைது செய்துள்ளது.
இஸ்லாமிய கடும்போக்காளர்களின் வன்முறைச் செயல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தும், அவற்றைத் தடுக்கவோ அல்லது வெளிப்படுத்தவோ தவறியமை.
தாக்குதல் நடப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்தமை.
தாக்குதலின் பின்னர், அதனை இயக்கிய சூத்திரதாரிகள் மற்றும் குழுக்கள் வெளிச்சத்திற்கு வருவதைத் தடுக்க நேரடியாகவும்
மறைமுகமாகவும் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.







