ஈரானுடனான போர் முடியும் தருவாயில் உள்ளது – ட்ரம்ப்

60
0
Spread the love

ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பொக்ஸ் நியூஸிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன், என்று அவர் அந்த அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனத்திடம் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், அமெரிக்கா இப்போது பின்வாங்கினால், ஈரான் தனது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப 20 ஆண்டுகள் ஆகும் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

நாங்கள் இன்னும் வேலையை முடிக்கவில்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம், என்றும் அவர் கூறினார்.

ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள ஆர்வமாக இருப்பதாக தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி இந்த நேர்காணலில் வலியுறுத்தியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here