ஸ்டார்லிங்க் மூலம் உளவு பார்த்ததாக குற்றச்சாடில் பலரை கைது செய்த ஈரான்

9
0
Spread the love

ஸ்டார்லிங்க் (Starlink) கருவிகளை பயன்படுத்தி வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு முக்கிய தகவல்கள்,  படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பலரை ஈரான் பொலிஸார் கைது செய்துள்ளது.

தெஹ்ரான் (Tehran) நகரின் யூசுஃ அபாத் (Yousef Abad) பகுதியில் உள்ள குடியிருப்பொன்று, உளவு நடவடிக்கைகளுக்கான தளமாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அங்கு தங்கியிருந்த சந்தேகநபர்கள், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையம் உள்ளிட்ட மேம்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி

வெளிநாட்டு உளவு சேவைகள் மற்றும் விரோத வலையமைப்புகளுக்கு தகவல்களை அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனுடன், ஷிராஸ் (Shiraz) நகரத்திலிருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சர்வேஸ்தான் (Sarvestan) பகுதியில் மேலும் ஒருவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் முக்கிய மற்றும் உணர்திறன் வாய்ந்த இடங்களிலிருந்து செய்திகள், படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்பி விரோத வலையமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here