டிட்வா புயலினால் பாதிப்படைந்த 25 மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கிவைப்பு

117
0
Spread the love

மன்னாரில் டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட 25 மீனவர்களுக்கு சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (MSEDO) இன்றைய தினம் மீன்பிடி வலைகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு, இன்று (28.04) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் மன்னார் மாவட்டச்செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மெசிடோ (MSEDO) நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ, திட்ட முகாமையாளர் எஸ்.எஸ். ஜான்சன், திட்ட இணைப்பாளர் பி. ஜூலியஸ் கலந்து கொண்டு வலைகளை வழங்கிவைத்தனர்.

இதன்போது மன்னார் மீனவசங்கங்களினல் தெரிவு செய்யப்பட்ட 25 மீனவர்கள் மீன்பிடி வலைகளைப் பெற்றுக்கொண்டனர்.

சமூகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் குறித்த நிறுவத்தினால் மீனவர்களுக்கான உதவிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here