உயிரிழந்த நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று

23
0
Spread the love

நிதியமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமற்போன சம்பவம் தொடர்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த ரங்க நிஷாந்த ராஜபக்சவின் இறுதிக்கிரியை இன்று (02.04) பிற்பகல் நடைபெறவுள்ளது.

குளியாப்பிட்டியில் இன்று பிற்பகல் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் கடந்த 30ஆம் திகதி தமது வீட்டுத் தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இவரது மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நால்வர் அடங்கிய குழு, இது அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் சம்பவித்த தற்கொலை என்பதை நேற்று (01.04) உறுதிப்படுத்தியது.

ரங்க நிஷாந்த ராஜபக்ச பணி இடைநீக்கம் செய்யப்படும் போது, நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here