கிளிநொச்சியில் எல்-நினோ தாக்கம் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு

53
0
Spread the love

நாட்டில் நிலவிவரும் எல் நினோ காலநிலை தொடர்பில் மக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மெசிடோ(MSEDO) நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வுச் செயலமர்வு இன்று (18.06)வியாழன்,கிளிநொச்சி கே.கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கருத்தமர்வில்,பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா வளவளராகக் கலந்து கொண்டு எல்-நினோவின் தாக்கம் குறித்து,குறிப்பாக வடமாகாணத்தில் அதன் பாதிப்பு மற்றும் அபாயம் குறித்து தெளிவுபடுத்தினார். இதன்போது நீர் சேமிப்பதற்கான வழிமுறைகள்,தாவரங்கள் மற்றும் நீர்த்தாவரங்கள் வளர்த்தல் மாற்றுவழிப் பயிர்ச்செய்கைகள் மற்றும் எல்நி னோவின் தாக்கத்திலிருந்து மக்கள் தம்மைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பற்றித் தெளிவுபடுத்தினார்.

குறித்த கருத்தமர்வில்,ஐந்து மாவட்டங்களில் இருந்தும் மீனவசமூகப் பிரதிநிதிகள்,விவசாயிகள், சூழலியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் மன்னார் மெசிடோ நிறுவன தலைவர் ஜாட்சன் பிகிராடோ உள்ளிட்ட நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here