வாகனங்களின் விலைகள் அதிகரிக்குமா?

5
0
Spread the love

எதிர்வரும் காலத்தில் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததே இதற்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மே மாதம் முதல் சமூக பாதுகாப்பு வரி 2.5% வரை உயர்த்தப்பட்டிருப்பதும் வாகன விலையேற்றத்திற்கு ஒரு காரணமாக அமையும் என அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“அரசாங்கம் வாகன இறக்குமதியின் மூலம் பெரிய வருமானத்தை எதிர்பார்க்கிறது. எனது கணிப்பு சரியாக இருந்தால், இம்முறை சுமார் 700 பில்லியன் ரூபாயை எதிர்பார்க்கிறார்கள்.

அரசாங்கத்திற்கு அதிக வருமானத்தை ஈட்டிக்கொடுப்பது நாங்கள்தான். குறிப்பாகப் பயன்படுத்திய கார்கள் மூலம். ஒரு டொலருக்கு 1.5 டொலர் வருமானத்தை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

நாம் இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கு 2 டொலர் முதல் 2.5 டொலர் வரை வரி செலுத்துகிறோம்.

சில மின்சார வாகன இறக்குமதியில் உள்ள வரிச் சிக்கல்கள் காரணமாக, ஒரு டொலருக்கு அதைவிடக் குறைவான வருமானமே கிடைக்கிறது.

இது குறித்து ஆய்வு செய்யுமாறு நாம் அரசாங்கத்திடம் கோரியுள்ளோம். மே மாதம் முதல் சமூக பாதுகாப்பு வரி 2.5% ஆக அதிகரித்துள்ளதுடன், வெளிநாட்டு செலாவணி விகிதங்களும் அதிகரித்துள்ளன. இதனால் வாகனங்களின் விலையில் ஒரு ஏற்றத்தை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here