2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – 108 தொகுதிகளில் த.வெ.க அமோக வெற்றி

34
0
Spread the love

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன.

இதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெற்றியாளர்களின் விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. 73 எதிர்க்கட்சியாகியுள்ளது. இதுதவிர தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். கொளத்தூரில் போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் அ.தி.மு.க. 53 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளிலும், தே.மு.தி.க. 1 தொகுதியிலும், கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 1 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தி.மு.க. மட்டும் 59 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மறுப்பக்கம் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க. கட்சி 4 தொகுதிகளிலும் பா.ஜ.க. 1 தொகுதியிலும், அ.ம.மு.க. கட்சி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. அ.தி.மு.க. 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

வாக்கு சதவீதத்தை பொருத்தவரை 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 34.92 சதவீதம் வாக்குகளையும், தி.மு.க. 24.19 சதவீதமும், அ.தி.மு.க. 21.21 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.

வாக்குகளை பொருத்தவரை த.வெ.க. அதிகபட்சமாக 1,72,26,209 வாக்குகளையும், தி.மு.க. 5,89,500 வாக்குகளையும், அ.தி.மு.க. 1,04,62,146 வாக்குகளையும் பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here