விஜய்யின் அரசியல் வெற்றிக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக கஜேந்திரகுமார் வாழ்த்து

75
0
Spread the love

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜே. விஜய்க்கு, ஈழத் தமிழ் மக்களின் சார்பாக தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சாதனை படைத்து, மக்களின் பேராதரவோடு முதலமைச்சர் எனும் உயரிய பொறுப்பை ஏற்கவுள்ள விஜய்க்கு ஈழத் தமிழர்கள் சார்பில் வாழ்த்துகள் தெரிவிப்பதாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அரங்கிலும் இந்திய மத்திய அரசாங்கத்திடமும் ஈழ மக்களின் நீதிக்கான குரலாக விஜய் ஒலிக்க வேண்டும் என வேண்டுகோள் ஒன்றையும் அவர் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்திற்கு ஒரு புதிய வலுவைத் தரவேண்டும் என எதிர்பார்ப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

“தொப்புள்கொடி உறவுகள் என்ற உணர்வோடு, ஈழத் தாயகத்தின் விடியலுக்காக உங்கள் கரங்கள் நீளும் என்ற பெரும் எதிர்பார்ப்பு எங்களுக்குண்டு” என அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here