தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (NILET)நடாத்தப்பட்ட சிங்கள மொழி கற்கைநெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (10.05) ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்டச் செயலக ஜெயிக்கா மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கற்கைநெறி அரச உத்தியோகத்தர்களுக்கு150 மணித்தியாலங்களும் க.பொ.த.உயர்தரத்தினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு 120 மணித்தியாலங்களும் பயிற்றுவிக்கப்பட்டிருந்தது.
குறித்த கற்கை நெறியினைப் பூர்த்தி செய்திருந்த 36 அரச உத்தியோகத்தர்கள் மற்றும் 35 மாணவர்களுக்கு இன்றைய தினம் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இக்கற்கை நெறியில் பங்கு பற்றிய மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் நாடகங்கள், குழுப்பாடல்கள், நடனங்கள் போன்ற கலை நிகழ்வுகளை சிங்கள மொழியில் அரங்கேற்றினர்.
குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக, தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணைப்பாளர் ஹிரோஷிமா பெரேரா மன்னார் மாவட்டச் செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஜூட் ரொகான். மடு வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் பி.ஞானராஜ் ஆகியோர் கலந்து கொண்டதோடு இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியின் வளவாளர்களான டபிள்யூ.எம்.மஞ்சுளா ஜே.சுரங்க திலக், எம். நிரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.







