யாழ் தேவி மீண்டும் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது

53
0
Spread the love

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ் தேவி ரயில் சேவை இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் யாழ் தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கவுள்ளது.

அதேவேளை, ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த ரயில் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ் தேவி ரயிலானது குளிரூட்டப்பட்ட 4 முதல் வகுப்பு பெட்டிகளைக் கொண்டதுடன், அதில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here