சுற்றுலாத்துறை மூலம் இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 475.6 பில்லியன் ரூபா
வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் சுற்றுலாத்துறை வருவாயாக
50.5 பில்லியன் ரூபா ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் மாத்திரம் 1 லட்சத்து 38,730 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 31 ஆயிரத்து 734 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அத்துடன், சீனாவிலிருந்து 8,484 பேரும், பிரித்தானியாவில் இருந்து 14,959 பேரும், நெதர்லாந்திலிருந்து 8,415
பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 லட்சத்து 85 ஆயிரத்து 303 ஆகப் பதிவாகியுள்ளது.






