பின்லாந்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பெண் துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
பெண் சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
48 பேரிடமிருந்து சுமார் 87 மில்லியன் ரூபா பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய இலங்கை்கு அழைத்து செல்லப்பட்ட அவர் காலிபிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பண மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்காரவின் சகோதரரான திசர நாணாயக்கார மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
பின்லாந்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் திகதி திசர நாணாயக்கார கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு ஜனவரி 17ஆம் திகதி பிணை வழங்கப்பட்டது.







