அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலக சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதுடன், தங்கத்தின் விலை கடந்த மூன்று வாரங்களில் இல்லாதளவுக்கு உயர்வடைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக கடந்த வாரம் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் அவரது புதிய வரி அறிவிப்புகள் டொலரின் மதிப்பை பாதிக்க செய்துள்ளன.
அமெரிக்க அரசாங்கத்தினால் அறவிடப்பட்ட 170 பில்லியன் டொலர் வரிப்பணத்தை மீண்டும் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டியிருக்கும் என்ற எதிர்பார்ப்பும் டொலர் மீதான நம்பிக்கையைத் தளர்த்தியுள்ளது.
அத்துடன் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
டொலர் மீதான நம்பிக்கை குறைந்துள்ள சூழலில், உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,150.22 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.
இது கடந்த மூன்று வார காலப்பகுதியில் பதிவான அதிகபட்ச விலையாகும்.







