தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு
“போதைப்பொருளுக்கு இல்லை என்று சொல்லுங்கள்”எனும் விழிப்புணர்வு நடைபவனி மன்னாரில் இன்று(23.05) சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வளாகத்தில் இருந்து
ஆரம்பமான இந்த நடைபவனி மன்னார் நகர சுற்றுவட்டப்பகுதிக்குச் சென்று முடிவடைந்தது.
இளைஞர்களிடையே போதைப்பொருள் பாவனையைத் தடுத்து நிறுத்தும் நோக்கிலும் சமூகத்தில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் மன்னார் தேசிய இளைஞர் சேவை மன்றமும் மன்னார் மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனமும் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.
குறித்த நடைபவனியில், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன், மன்னார் அரச அதிபர் க.கனகேஸ்வரன்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் Z.A.ஹிலருதீன்,இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ.டியூக் குரூஸ்
மற்றும் நகர முதல்வர் டேனியல் வசந்தன் ஆகியோர் கலந்து கொண்டதோடு,
இளைஞர் கழகங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள்,பாடசாலை மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டிருந்தனர்.








