மருதானையில் ரயில் இயந்திரம் தடம்புரள்வு

38
0
Spread the love

மருதானையிலிருந்து ஹிக்கடுவ நோக்கி நாளாந்தம் மாலை 6.10 மணிக்குப் புறப்படும் கடுகதி ரயிலின் இயந்திரம் இன்று (24) பிற்பகல் மருதானையில் வைத்து தடம் புரண்டுள்ளது.

குறித்த ரயில் இயந்திரம், ரயில் முனையத்திலிருந்து மருதானை ரயில் மேடையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ரயிலின் பெட்டிகளை நோக்கி நகர்த்தி செல்லப்பட்ட போது மருதானை பாலத்திற்கு அருகில் வைத்து இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் எஞ்சினின் 4 சக்கரங்கள் தடம் புரண்டுள்ளதுடன், இதன் காரணமாக மருதானை மற்றும் கொழும்பு கோட்டை ஆகிய நிலையங்களுக்கு இடையிலான ரயில்பாதையின் ஒரு பகுதியின் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here