மன்னாரில் நாளை 28 ஆம் திகதி “அலைகடல்” இன்னும் இந்திய நாடகத்தை அரங்கேற்றவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை (28.05) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இந்நாடகம் அரங்கேற்றப்படவுள்ளது.
மக்களின் உண்மை அனுபவங்களையும் உணர்வுகளையும் வலிமையாக வெளிப்படுத்தும் வகையில்,
இம்மேடை நாடகமானது நாடக மற்றும் நடன இயக்குநரும் கலைஞருமான ஜுனபர் இயக்கத்தில்,
கடலோர சமூகங்களின் உறுதியான மனப்பாங்கு, அன்றாடப் போராட்டங்கள் மற்றும் அவர்களின் கண்ணியமான வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டுப்புற, மற்றும் நவீன அரங்கேற்றக் கலைகளின் சங்கமமாகத் திகழப்போகும் இந்நாடகத்தைக் கண்டுகளிக்க அனைவரையும் வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.







