கடல் கொந்தளிப்பு தொடர்பில் செம்மஞ்சள் எச்சரிக்கை

6
0
Spread the love

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, காங்கேசன்துறை முதல் மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோரப் பகுதிகளில்
ஏற்படும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நாளை முற்பகல் 11.00 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலாபம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் 2 முதல் 3 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here