செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி அணையா விளக்கு போராட்டம்

6
0
Spread the love

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “உரிமை பந்தப் போர்” அணையா விளக்கு போராட்டம் இன்று (28) இடம்பெற்றது.

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (28) மாலை 4 மணிக்கு போராட்டம் ஆரம்பமானது.

பொது அணையா விளக்கை மாவீரின் தாயார் ஏற்றி வைத்தார். அணையா விளக்கிற்கு காணாமல் போனோர்களின் உறவுகளின் தாயார் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து, அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

நீதி கோரிய பயணத்தை செம்மணியில் இருந்து ஆரம்பித்திருப்பதாக தெரிவித்த ஏற்பாட்டாளர்கள் இந்த பயணம் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.

நீதி கோரும் பயணத்திற்கு மேலும் அனைவரும் ஆதரவை வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here