07 கோடியே 22 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்

6
0
Spread the love

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 07 கோடியே 22 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட
ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது ஹசீஸ் மற்றும் குஷ் போதைப்பொட்களை சுமார் 15 கண்ணாடிப் போத்தல்களுக்குள் அடைத்து,
விமான நிலையத்திலுள்ள இலங்கை தீர்வையற்ற வர்த்தக வளாகத்தின் பெயர் அச்சிடப்பட்ட பொலித்தீன் பைகளில் அவர்கள் மறைத்து வைத்துள்ளனர்.

சந்தேகநபர்கள் கேகாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here