சில கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

14
0
Spread the love

நாட்டின் சில கடற்பிராந்தியங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, காங்கேசன்துறை முதல் மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான
கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு சுமார் 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என,
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் இந்த எச்சரிக்கை தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here