விமான நிலையத்தில் 42 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

9
0
Spread the love

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 42 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அந்த பெண் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சீனாவின் குன்மிங் (Kunming) நகரிலிருந்து இன்று (29) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது அவரது பயணப் பொதிகளில் 28,000 சீன தயாரிப்பு சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண் 40 வயதுடைய சீன நாட்டு பெண் தொழிலதிபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here