வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் சென்ற பாடசாலை மாணவர்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்ந்துள்ளது.
மாணவர்கள் 5 பேர் தோணியில் சென்று கொண்டிருந்த போது, தோணி தலைகீழாகக் கவிழ்ந்ததில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
அவர்களில் ஒரு மாணவர் நீந்தி கரை சேர்ந்து உயிர் தப்பியுள்ளதுடன், ஏனைய நான்கு பிள்ளைகளும் நீரில் மூழ்கியுள்ளனர்.
அவ்வாறு நீரில் மூழ்கிய ஏனைய நான்கு மாணவர்களும் இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த மாணவர்கள் 16 வயதுடைய பண்டாரநாயக்கபுர மற்றும் மங்களபுர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இச்சம்பவம் குறித்து வனாத்தவில்லுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







